Saturday 6 October 2012

ஜவ்வு மிட்டாய் கடிகாரம்,மோதிரம் ,மாலை ,நெக்லஸ் ,காப்பு ....எல்லாம் செய்து


ஜவ்வு மிட்டாய்:

குழந்தை பருவத்தில் .....சில நேரங்களில் சொந்த தாத்தாவைவிட  ...கண்கள் அதிகம் தேடியது இந்த தாத்தாவை தான் ....நீண்ட குச்சி ..அதன் உச்சியில் ஒரு பொம்மை ...பொம்மையின் அடிப்பகுதியில் தொடர்ச்சியாய் ....கண்ணாடி காகிதம் சுற்றப்பட்ட ..கண்ணை கவரும் ...ஜவ்வு மிட்டாய் ...எங்காவது கோவில் திருவிழாவோ இல்ல பண்டிகையோ நடக்கும் போது இந்த பப்பர மிட்டாய் என்கிற பாம்பே மிட்டாய் பார்க்கலாம். அப்புறம் வீதி வீதியா ஒரு காலத்துல கொண்டு வந்து வித்துட்டு இருந்தாங்க.ஒரு நீண்ட கழியில் ஒரு பொம்மையை வச்சிக்கிட்டு அதன் இரு கையில் ஜிங்குசா வச்சி இருப்பாங்க ரெண்டு கையும் தட்டுனா சத்தம் வர்ற மாதிரி வச்சிக்கிட்டு கூவிகிட்டு இருப்பாங்க. நல்ல ரோஸ் நிறத்தில் கொஞ்சம் வெள்ளை நிறத்துடன் (இன்னும் நிறைய கலர் இருக்கும்) ஜவ்வு மிட்டாயை பாலிதீன் பேப்பர்ல சுத்தி அந்த கழியில் வச்சி என்ன உருவம் வேணுமோ அதை பண்ணி தருவாங்க...வாட்சு, மோதிரம், மயில், வண்டி இப்படி நிறைய... இதை இப்போ பார்க்கும் போது சிறு வயசில் இதை வாங்கி சாப்பிட்ட அனுபவம் கண்ணுக்கு தெரியுது.

வாட்சு கேட்டால் அதை அழகாய் செஞ்சு கையில் கட்டி விடுவாங்க.. அதை அப்பப்ப நேரம் பார்த்துகிட்டே கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து இழுத்து சாப்பிட்டு காலி பண்றது இருக்கே அது.... ஒரு சுவை மிகுந்த அனுபவம்....அப்புறம் அவங்க குடுக்கிற ஜவ்வு மிட்டாயை நம்மளும் என்ன என்ன பண்ண முடியுமோ பண்ணி அதை கொலையா கொன்னு எடுக்கிறது ஒரு சுகம்....அப்புறம் அதை எவ்ளோ தூரம் இழுக்க முடியுமோ இழுத்து அதை வாயை அண்ணாந்து பொளந்து கிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே தள்ளுறது இருக்கே அது ஒரு சுகம்....நல்லா சவுக் சவுக்னு மென்னு தின்கிறதால் வாய்க்கு  கூட நல்ல எக்ஸ்சசைஸ் ஆக இருக்கும். (இதை பார்த்து தான் ஒருவேளை பபிள் கம் தயாரிச்சு இருப்பாங்களோ இல்லை பபிள் கம் பார்த்து நம்மாளுங்க இதை  தயாரிச்சு இருப்பாங்களோ).

இப்போலோம் இது ரொம்ப குறைந்துவிட்டது. யாரும் வாங்கி சாப்பிடுவது இல்லை.(ரொம்ப ஹைஜீனிக்கா இருக்காதுன்னு நினைச்சு இருப்பாங்களோ).அப்போ இருந்த விலை வாசியில இதெல்லாம் குடிசைத்தொழிலா இருந்து குழந்தைகளின் ரொம்ப விருப்பமா இருந்துச்சு. காலமாற்றத்தின் காரணமாக சாக்லேட், ஐஸ்கிரீம் இது போன்ற வஸ்துகள் நிறைய வந்ததினால் இதெல்லாம் மறைந்து விட்டது.இந்த மாதிரி குடிசை தொழில்கள் நிறைய அழிந்து விட்டன..

இப்போ ஒரு சில நகரங்களில் பிறந்தநாள், கல்யாண விழாக்களில் இதனை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.



காலத்தின் ...வேகமான மாற்றத்தில் ...இப்போது ....காணாமல் போனவர்கள் படடியலில் ...இணைந்துகொண்டது ...'ஜவ்வு மிட்டாய் '.. ....மிச்சமிருப்பது ...அதன் வாசனை மட்டுமே .....

No comments:

Post a Comment